fbpx

’கலைஞரின் வசனத்தில் நடிக்க மறுத்த கே.பி.சுந்தராம்பாள்’..!! இன்று 115-வது பிறந்தநாள்..!!

கண்களை மூடிக் கொண்டு, அவ்வை என்று நினைத்தால் நம் மனக்கண்ணில் தெரியும் முகம் சுந்தாராம்பாளுடையது தான். நடிகை, பாடகி, மேடைக்கலைஞர் என பன்முகத் தன்மை கொண்ட கே.பி. சுந்தராம்பாளின் 115-வது பிறந்தநாள் இன்று. அவர் பற்றிய சிலச் சுவாரஸ்யத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.

கே.பி. சுந்தராம்பாள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால், அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார். ஔவையார், காரைக்கால் அம்மையார், கௌந்தி அடிகள் என அவரை அந்த கதாபாத்திரமாக மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர கே.பி. சுந்தராம்பளாக திரையில் தனித்துக் காண்பது கடினம். ‘பணத்திற்காக எந்த வேடத்தையும் போட மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர் சுந்தராம்பாள். ஒருமுறை கருணாநிதியின் ‘பூம்புகார்’ படத்தில் கெளந்தி அடிகள் கதாபாத்திரத்திற்கு வந்த வாய்ப்பை முதலில் நடிக்க மறுத்தார் சுந்தராம்பாள்.

ஆன்மிகவாதியான சுந்தராம்பாள் கலைஞரின் நாத்திக வசனத்தில் நடிக்க மாட்டேன் என்றார். ஆனால், அப்படி இல்லை என சுந்தராம்பாளிடம் பேசி, நடிக்க சம்மதிக்க வைத்தார் கலைஞர். மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் திரைக்கலைஞர் கே.பி. சுந்தராம்பாள். இவர், மொத்தமே நடித்துள்ள படங்கள் பன்னிரண்டு. ஆனால், அத்தனையும் அவரைத் தேடி வந்த வாய்ப்புகள்.

அஸந்தாஸ் நந்தனார், ஒளவையார், மணிமேகலை, பூம்புகார், திருவிளையாடல் ஆகியவை முக்கியமானவை. ‘ஒளவையாரைப் போல் எனக்குப் புகழும், பொருளும் தந்த படம் வேறெதுவுமில்லை’ என்பார் பெருமையுடன். கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்த இவர் 1927இல் இலங்கை சென்றிருந்த போது, அங்கே எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார்.

பின்பு இருவருக்கும் திருமணம் ஆனாது. ஆனால், 28 வயதில் கிட்டப்பாவின் எதிர்பாராத மரணம் சுந்தரம்பாளை நிலைகுலைய வைத்தது. கணவனை இழந்த 25 வயதில் இனிமேல் வெள்ளை உடைதான் அணிவேன், யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என உறுதி பூண்டு அதை இறுதிவரை கடைபிடித்தார். நடிப்பது மட்டுமல்லாது சிறந்த பாடகியாவும் விளங்கினார் சுந்தராம்பாள். அந்த காலத்திலே பாடலுக்காக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய பாடகி என்ற பெருமையையும் பெற்றவர்.

Chella

Next Post

உணவு ஆர்டர்களை எடுத்துச் செல்ல உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படாது - உச்சநீதிமன்றம்…

Wed Oct 11 , 2023
உணவு ஆர்டர்களை எடுத்துச் செல்வதற்கும், அதனுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் வளாகத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், உணவகங்கள் சேவை வரிக்கு உட்பட்டவை அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு சிவில் மேல்முறையீட்டை பரிசீலிக்கும் போது, உச்ச நீதிமன்றம் சுங்க கலால் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (CESTAT) தீர்ப்பை உறுதிசெய்தது. CESTAT இன் தீர்ப்பிற்கு எதிராக வரித்துறை விரும்பிய மேல்முறையீட்டை தகுதியற்றது என்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த பிரச்சினை சரக்கு மற்றும் சேவை […]

You May Like