fbpx

சரத்குமாரை சீண்டிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.. புகார் அளித்த ராதிகா சரத் குமார்!

திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது பாஜகவை சேர்ந்த நடிகை ராதிகா புகார் கொடுத்துள்ளார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார், ராதிகா பற்றி அவதூறு பரப்பும் விதமாக சிவாஜி பேசியதற்கு ராதிகா கடுமையாகத் திட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜெயிலுக்கு போயும் திருந்தலையா நீ? உன் பேச்சுக்கு கடுமையா தண்டிக்கப்படனும்’ என ராதிகா சொல்லி இருந்தார். இதனை அடுத்து, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

“ஊழியர்களை சீனாவில் இருந்து வெளியேற சொல்லும் மைக்ரோசாப்ட்..!” என்ன காரணம் தெரியுமா?

Next Post

'ராமரை தொடர்ந்து சீதைக்கும் கோயில்' மோடியால் மட்டுமே இது முடியும்!! ஒரே போடாய் போட்ட அமித்ஷா!!

Fri May 17 , 2024
பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்படும் என என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய பிரதமர் மோடிக்கு, சீதா தேவி பிறந்த இடத்தில் பெரிய நினைவிடம் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. ராமர் கோயிலில் இருந்து ஒதுங்கிக்கொண்டவர்களால் […]

You May Like