fbpx

ராமர் கோவில் கும்பாபிஷேகம்!… ஜன.20-25 வரை முஸ்லிம்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும்!… சர்ச்சைக்கு பாஜக பதிலடி!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வரும் 20ம் தேதிமுதல் 25ம் தேதிவரை முஸ்லிம்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பின் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.இதற்காக பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி வரும் 20ம் தேதிமுதல் 25ம் தேதிவரை முஸ்லிம்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் பார்பெட்டா நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜனவரி 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முஸ்லிம்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். ராமஜென்ம பூமியில் நிறுவப்படும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும். லட்சக்கணக்கான மக்கள் பஸ்களிலும், ரெயில்களிலும், விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்வார்கள். நாம் அமைதி காக்க வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என கூறினார்.

இந்த காலகட்டத்தில், நாம் பயணம் செய்யாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். பா.ஜ.க. பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது. முஸ்லிம்களின் பெரிய எதிரியாக பாஜக உள்ளது. நம்முடைய வாழ்க்கை, நம்பிக்கை, மசூதிகள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆசன் ஆகியவற்றுக்கு எதிரியாக உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

இதற்கு பதிலடியாக, பாஜக முஸ்லிம்களை வெறுக்கவில்லை. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற மந்திரத்துடன் நாங்கள் செயல்படுகிறோம். அயோத்தி நிலப் பிரச்சனை வழக்கில் முன்னாள் வழக்கறிஞரான இக்பால் அன்சாரி, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பிரார்த்தனையில் பங்கேற்பார். பத்ருதீன் அஜ்மல் மற்றும் ஒவைசி போன்றவர்கள் சமூகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர். பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.

Kokila

Next Post

டிகிரி முடித்த நபர்களுக்கு தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்...! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Sun Jan 7 , 2024
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Relationship Officer, Areas Sales Manager பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 9 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like