அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ என துவக்கி தொடர்ந்து அவர் பேசுகையில், “வரும் 22ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதில் நான் பங்கேற்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாக புதிய சக்தியை பெறுகிறேன்.sச்ச்ச்ச்
நான் ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன். இது போன்ற உணர்வை நான் அறிந்ததில்லை. ராம பக்தர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும். இது நாட்டு மக்களின் விழா, அனைவரையும் முன்னிலைப்படுத்த கடவுள் என்னை படைத்திருக்கிறார். சுவாமி விவேகானந்தர், சத்ரபதிசிவாஜி ஆகியோரை நினைவுகூர்கிறேன். ஆன்மீகம் நமது கலாசாரத்தை உலக அளவில் புகழை பெற்று கொடுத்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைக்கும் போது ஒரு உத்வேகம் பிறக்கிறது. அவரது ஆற்றலும் , உற்சாகமும் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” என பேசியுள்ளார்.