கும்பகோணம் வெற்றிலை.. தோவாளை மாணிக்க பூ மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார்..
புவிசார் குறியீடு என்பது ஒவ்வொரு மாநிலங்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் தனித்தன்மை கொண்ட பொருட்களுக்கு கொடுக்கப்படுவது. அதன்படி அந்த பொருட்கள் சர்வதேச அளவில் பிரபலமாகிறது. அந்த வகையில் 195 இந்திய பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம், உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும்
இந்த வரிசையில் கும்பகோணம் வெற்றிலை.. தோவாளை மாணிக்க பூ மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தது.
வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களைச் சம அளவில் கட்டுகிறபோது அது மாணிக்கம் போன்று தோற்றமளிப்பதால் மாணிக்கமாலை என பெயர் பெற்றது. இத்தகைய தோவாளை மாணிக்கமாலைக்குக் கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் வெற்றிலை.. தோவாளை மாணிக்க பூ மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண் விளைபொருட்களான கும்ப கோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் புவிசார் கூறியீடு பெற்ற பொருட்கள்: தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மதுரை மல்லி, மதுரை சுங்குடி சேலை, சேலத்து மாம்பழம், தஞ்சை ஓவியங்கள், நெல்லை பத்தமடை பாய் , பண்ருட்டி பலாப்பழம், திருவண்ணாமலை ஏலக்கி வாழைப்பழம், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், நெல்லை அல்வா, வில்லிப்புதூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள்,
திண்டுக்கல் பூட்டு, ஆம்பூர் பிரியாணி, சிவகாசி பட்டாசு, கும்பகோணம் காபி, நாகை நேந்திரம் வாழை, மார்த்தாண்டம் தேன், தேனி கரும்பு, ஊத்துக்குளி வெண்ணெய், திருச்செந்தூர் கருப்பட்டி, வாணியம்பாடி பிரியாணி, பவானி ஜமக்காளம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, திருப்பாச்சி அரிவாள், விருதுநகர் பரோட்டா, சின்னாளப்பட்டி சேலை, உடன்குடி கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, சோழவந்தான் வெற்றிலை, அரும்பாவூர் மரசிற்பம், பொள்ளாச்சி இளநீர், சுவாமிமலை வெண்கலச் சிலை வார்ப்பு, இலவம்பாடி முள் கத்திரிகாய் உள்ளிட்டவைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.