சென்னை குன்றத்தூர் அபிராமியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால், கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து தமிழ்நாட்டையே அதிர வைத்தார்.
சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் அபிராமி. இவர், டிக்டாக்கில் பிரபலம் ஆனவர். இவரது கணவர் விஜய். இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், அபிராமி அதே பகுதியில் இருந்த பிரியாணிக் கடைக்கு அடிக்கடி சென்று பிரியாணி வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். அப்போது, பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுந்தரத்தை பார்க்க முடியாமலும், பேச முடியாமலும் தவித்து வந்துள்ளார் அபிராமி. இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார் அபிராமி.
இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்தும், தலையணையால் அமுக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்தார் அபிராமி. ஆனால், இதில் கணவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அபிராமி, தற்போது புழசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு சுமார் 7 ஆண்டுகளாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அபிராமியின் உறவினர்கள் உட்பட 22 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஆகையால், இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Read More : ’திட்டமிட்டபடி தவெக மாநாடு நடக்காது போலயே’..!! இவ்வளவு சிக்கல்கள் இருக்கா..? எல்லாமே மாறுது..!!