fbpx

தொட்டுத் தொட்டு பேசும் லேப் டெக்னீசியன்..!! சக மாணவிகளின் ஃபோன் நம்பரை கேட்டு டார்ச்சர்..!! உடனடி ஆக்‌ஷன் எடுத்த சேலம் அரசு மருத்துவக் கல்லூரி..!!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படித்து பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் லேப் டெக்னீசியன் வேலு என்பவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, மருத்துவக் கல்லூரியில் முதல்வர் தேவி மீனாளிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளித்தனர். அதன்பேரில், விசாகா கமிட்டி தலைவர் மருத்துவர் சுபா தலைமையில் மாணவிகளிடமும் லேப் டெக்னீசியன் வேலுவிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தங்கள் உடலை அடிக்கடி தொட்டு பேசுவதாகவும், உங்களுடன் படிக்கும் பிற மாணவிகளின் செல்போன் நம்பரை தர வேண்டும் என்று லேப் டெக்னீசியன் வேலு கேட்பதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனாளிடம் ஆகியோரிடம் விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வேலுவை சஸ்பெண்ட் செய்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனாள் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், அவர் வேறு ஏதேனும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்பது குறித்து மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் தேவி மீனாள் கூறுகையில், லேப் டெக்னீசியன் மீது பாலியல் புகார் வந்தது. அதனை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Read More : ’6 மாசத்துக்கு அமைதியா இருங்க’..!! ’நாங்களே எடப்பாடியிடம் பேசுறோம்’..!! மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்..!!

English Summary

The affected students complained to the principal of the medical college, Devi Meenal, that a lab technician named Velu was sexually harassing them.

Chella

Next Post

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடல் எடை குறையுமா..? - நிபுணர்கள் விளக்கம்

Fri Feb 14 , 2025
Health tips: Will you really lose weight if you stop eating sugar for 45 days?

You May Like