Parliament: கடந்த 2023ஆம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, சிஆர்பிஎப் வசம் இருந்த நாடாளுமன்றம் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் பொறுப்பில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
2001ல் நிகழ்த்தப்பட்ட இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அதேநாளில் மற்றுமொரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்தது. பூஜ்ஜிய நேரத்தின்போது அத்துமீறி உள்ளே நுழைந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக சிஆர்பிஎப் வசம் இருந்த நாடாளுமன்றம் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் பொறுப்பில் இன்று ஒப்படைக்கப்படுகிறது. CISF என்பது மத்திய ஆயுதமேந்திய போலீஸ் படை (CAPF) ஆகும். 3,300 க்கும் மேற்பட்ட CISF வீரர்கள் இன்றுமுதல் (மே 20) பாராளுமன்ற வளாகத்தில் முழுமையான பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். கடந்த 10 நாட்களாக சிஐஎஸ்எப் பணியாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மக்களவை தேர்தலுக்கு பின் புதிய அரசு பதவி ஏற்கும்போது அங்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் கூறப்படுகிறது.
Readmore: ‘Hard Landing’ என்றால் என்ன?… ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து முன்னாள் விமானி விளக்கம்!