fbpx

பெண்களே..!! இனி ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது போலயே..!! திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு..!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இந்த மகளிர் உரிமைத்தொகை பலருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், உரிமைத்தொகை குறித்து அடிக்கடி மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும். மாதந்தோறும் சிறப்புக் கூட்டங்களை நடத்தி அதில் பணவசதி கொண்டவர்கள் யாராவது உரிமை தொகை பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) அக்டோபர் 26ஆம் தேதி முதல் உரிமைத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் எம்.பி. முருகையன் உறுதி செய்திருந்தார். பிரபல ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்த திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ள ஏஐஎஸ் சிறப்பு அதிகாரி செயல்பாடுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இந்த திட்டத்தில் சில சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து பேச போனால், சிறப்பு அதிகாரி ஆர்வம் காட்டுவதில்லை. அவரது போக்கும் நடத்தையும் ஊழியர்களுக்கு விரோதமாக இருக்கிறது. இதுவே உரிமைத்தொகை பணிகளைப் புறக்கணிக்க முக்கியக் காரணமாகும்” என்று கூறியிருந்தார். ஏற்கனவே தாலுகா அளவில் சில இடங்களில் ஆள்பற்றாக்குறை இருக்கிறது. இது அரசுக்கும் நன்கு தெரியும். எனவே, இத்திட்டத்திற்குக் கூடுதல் அதிகாரிகள் நிச்சயம் தேவைப்படும். அப்படியிருக்கும் போது வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் உரிமைத்தொகை திட்டப் பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு..!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Oct 26 , 2023
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கலாம். இந்த விண்ணப்ப படிவங்களை டிசம்பர் 9ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்நிலையில் நவம்பர் 4, 5 மற்றும் […]

You May Like