fbpx

பெண்களே!… உங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லையா? வீட்டில் இருந்தே வாரம் ரூ.35,000 வரை சம்பாதிக்கலாம்!… டிப்ஸ் இதோ!

பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊர்காய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம். அந்தவகையில் வீட்டில் இருந்தபடியே பெண்கள் வாரம் ரூ.35,000 வரை சம்பாதிக்கலாம். இதுகுறித்த ஓர் தொகுப்பை பார்க்கலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் தங்களின் அன்றாட வேலைகளை கூட செய்து கொள்ள நேரமில்லாத காரணத்தால் அனைவரும் இன்ஸ்டன்ட் காபி, டீ, ரெடிமேட் சப்பாத்தி போன்றவற்றை நாடி செல்கின்றனர். அந்தவகையில் தற்போது இன்ஸ்டண்ட் இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும் நல்ல லாபம் கிடைக்கிறது.

எப்படி தயாரிப்பது: முதலில் இதற்கு தேவையான மூலப்பொருள் என்னவென்றால், இடியாப்பம் மாவு, உப்பு, தண்ணீர், இடியாப்பம் மேக்கிங் மெசின், மற்றும் பேக்கிங் மெசின் தேவைப்படும். இது ஒரு உணவு சம்பந்தபட்ட தொழில் என்பதால், இதனை தொடங்குவதற்கு முன் FSSAI ஆவணம் கண்டிப்பாக தேவைப்படும். அதேபோல் நீங்கள் தயாரிக்கும் இன்ஸ்டண்ட் இடியாப்பத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டுமென்றால் ஜிஎஸ்டி பதிவு பெற்றிருக்க வேண்டும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்பம் மாவு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள், பின்னர் அதனை மேக்கிங் மெஷினில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை ஆன் செய்துவிடுங்கள். பின்னர் அதுவே நமக்கு தேவையான இடியாப்பத்தை தயாரித்து கொடுத்துவிடும். பிறகு அதனை பேக்கிங் மெஷினை பயன்படுத்து பேக்கிங் செய்துகொள்ளுங்கள். இதையடுத்து, நீங்கள் தயாரித்து இன்ஸ்டண்ட் இடியாப்பத்தை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். ஆன்லைன்மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ இடியாப்பத்தின் விலை ரூ.490 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால், நீங்கள் ஒரு 10 கிலோ வரை விற்பனை செய்கிறீர்கள் என்றால், ரூ.4,900 முதல் 5,000 வரை சம்பாதிக்கலாம். தோராயமாக ஒருவாரத்திற்கு 34,000 ரூபாய் முதல் 35,000 வரை சம்பாதிக்கலாம்.

Kokila

Next Post

புகைப்பிடிப்பவர்களா நீங்கள்?... காது கேட்காமல் போய்விடும்!... நிபுணர்கள் கூறுவது என்ன?

Mon Jul 17 , 2023
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான காது கேளாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புகைப்பிடித்தல் என்பது பல்வேறு கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். ஆனால் புகைப்பிடிப்பதால் செவித்திறன் இழப்பு ஏற்படுவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் காது கேளாமை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான […]

You May Like