ஆண்களை விட பெண்களே நொறுக்குத் தீனிகளை உண்ணும் பழக்கம் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாதல் உணவுப் பசியை அதிகரிக்கிறது. வறுத்த மற்றும் நொறுக்குத் தீனிகளும் உணவுப் பசியை அதிகரிக்கும். அதேசமயம் அப்படி அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்கு எந்த விதமான சத்துக்களோ, ஆரோக்கியமோ கிடைப்பதில்லை. மூளையானது நொறுக்குத் தீனிகளின் மீது ஆசையை அதிகரிக்கிறது. ஆனால் அது செரிமானத்தை கெடுக்கும். உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக இருக்க வேண்டும். ஆனால் ஜங்க் உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிக உப்பு மற்றும் மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் உணவுப் பசி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பெண்களிடையே நொறுக்குத் தீனிகளை விரும்புவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் ஐந்தில் ஒருவர் அதிக பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களை உட்கொண்டதாக ஆராய்ச்சி காட்டுகிறது. பெண்களுக்கு உணவின் மீது ஆசை அதிகரிப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள், மோமோஸ், பீட்சா, பர்கர்கள், பேஸ்ட்ரிகள், சர்க்கரை பானங்கள், துரித உணவுகளைபெண்கள் ஆண்களை விட அதிகம் உட்கொள்கிறார்கள்.
இந்தியாவிலும் நொறுக்குத் தீனிகளை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது அதிக எடைக்கு வழிவகுக்கிறது. ஜங்க் ஃபுட் பழக்கத்திலிருந்து விடுபட சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். நிறைய தண்ணீர் குடிக்கவும், சர்க்கரை உட்கொள்வதை தவிர்க்கவும் பரிந்துரைக்கின்றனர். குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உண்ணுங்கள். போதுமான அளவு தூக்கமும் அவசியம்.