fbpx

50 செகண்ட் விளம்பரத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!… அதிக சம்பளம் பெறும் டாப் 10 நடிகைகள்!

சினிமாவிலும் மக்கள் மனதிலும் பிரபலமான நடிகைகள் பல கோடிகளில் சம்பளம் பெற்று சொத்து சேர்த்து டாப் இடங்களில் இருக்கும் நடிகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் பச்சனின் மொத்த சொத்து மதிப்பு 828 கோடி ரூபாயாம். மேலும் அவர் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குவாராம். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு 15 இலிருந்து 40 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்குகிறார். மேலும் இவரின் மொத்த சொத்து மதிப்பு 580 கோடியாகும்.

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நடிகை தீபிகா படுகோனிடம் மொத்தம் 50 கோடிக்கு சொத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு படத்திற்கு 15 இலிருந்து 30 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவாராம். நான்காவது இடத்தில் இருப்பவர் கரீனா கபூர். இவர் ஒரு படத்திற்கு 8 இலிருந்து 18 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 440 கோடி.

ஐந்தாவது இடத்தில் நடிகை அனுஷ்கா சர்மா. இவர் ஒரு படத்திற்கு 12 இலிருந்து 15 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவார். இவரிடம் இருக்கும் மொத்த சொத்து 255 கோடி. ஆறாவது இடத்தில் நடிகை மாதுரி தீட்ஷிட் தான் இருக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 250 கோடி எனவும் ஒரு படத்திற்கு 4 இலிருந்து 5 கோடிக்கு சம்பளம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஏழாவது இடத்தில் கத்ரீனா கைஃப் இருக்கிறார். இவர் 235 கோடிக்கு சொந்தகாரியாகவும் ஒரு படத்திற்கு 10 இலிருந்து 12 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார். எட்டாவதாக நடிகை ஆலியா பட் இவரும் ஒரு படத்திற்கு 10 இலிருந்து 15 கோடிக்கு சம்பளம் வாங்கி மொத்த சொத்து மதிப்பாக 229 கோடி வைத்திருக்கிறார்.

ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர், திரைப்படங்கள் மட்டுமின்றி சமீப காலமாக அதிக விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் 50 விநாடிகள் விளம்பரத்திற்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இவர், ஒரு படத்திற்கு 10 இலிருந்து 11 கோடிக்கு சம்பளம் வாங்கி மொத்த சொத்தாக 200 கோடி வைத்திருக்கிறார். பத்தாவது இடத்தில் இருப்பவர் நடிகை ஷ்ரத்தா கபூர் இவரின் மொத்த சொத்து 123 கோடி ஆகும்.

Kokila

Next Post

Bharat Electronics Limited நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு...! மாதம் ரூ.17,500 ஊதியம்...!

Sun Oct 1 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 120 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 2 ஆண்டுகள் […]

You May Like