fbpx

நிலத்தகராறு..! ஓய்வு பெற்ற பெண் மருத்துவரை மிரட்டிய ஓபிஎஸ் சகோதரர்..! பாய்ந்தது வழக்கு..!

பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது நிலத்தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியிருந்து வருபவர் ஓய்வு பெற்ற மருத்துவர் விமலா திருமலை. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஓ.சண்முகசுந்தரம் என்பவருக்கும் இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஓ.சண்முகசுந்தரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மருத்துவர் விமலாவின் வீடு பலவீனமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, வீட்டை சரிசெய்ய ஆட்களை அனுப்பி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.

நிலத்தகராறு..! ஓய்வுபெற்ற பெண் மருத்துவரை மிரட்டிய ஓபிஎஸ் சகோதரர்..! பாய்ந்தது வழக்கு..!

இதுபற்றி தகவலறிந்த ஓ.சண்முகசுந்தரம், நேரடியாக சென்று விமலா திருமலை உடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, தகராறு முற்றி கொலை மிரட்டல் விடுத்ததாக ஓ.சண்முகசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தென்கரை காவல்நிலையத்தில் விமலா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஓ.சண்முகசுந்திரத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்கரை காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், விமலா என்பவர் ஓய்வு பெற்ற பெண் மருத்துவர். இவரது வீட்டின் அருகே ஓ.சண்முகசுந்தரத்திற்கு காலியிடம் உள்ளது.

நிலத்தகராறு..! ஓய்வுபெற்ற பெண் மருத்துவரை மிரட்டிய ஓபிஎஸ் சகோதரர்..! பாய்ந்தது வழக்கு..!

இந்த இடம் தொடர்பாக இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டின் சுவற்றின் அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததால் வேலைக்கு ஆட்களை வரச் சொல்லியிருக்கிறார் விமலா. பின்னர் வேலை செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன. அப்போது ஓ.சண்முகசுந்தரம் வந்து வேலை செய்யவிடாமல் தடுத்துள்ளார். பெண் என்றும் பாராமல் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 294(b), 506(i) IPC 4 of TNPHW Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்படும் பொதுவான வார்த்தைகள் இவைதான்..

Tue Sep 20 , 2022
எழுத்துப்பிழை என்பது பொதுவான பிரச்சனையாகும்.. அது தமிழாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலமாக இருந்தாலும் சரி.. அல்லது அவரவர் தாய் மொழியாக இருந்தாலும் சரி.. எழுதும் போது மட்டுமல்ல கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்பட்ட சொற்களை தி நாலெட்ஜ் அகாடமி கண்டறிந்தது.. அதன்படி கூகுளில் எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியல் வெளியாகி உள்ளது. எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் Separate (92,000) Zucchini (60,400) Questionnaire (46,000) Potato (38,000) […]

You May Like