fbpx

தூக்கத்தில் இருந்து கண்விழிக்க அடம் பிடிக்கும் லேண்டர், ரோவர்..!! மீண்டும் பூமிக்கே வருகிறதா..?

நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் ஒருவேளை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியாவிட்டால் என்ன நடக்கும்? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற மகத்தான சாதனை படைக்கப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் இஸ்ரோ மற்றும் இந்திய தேசியக்கொடி, இஸ்ரோவின் அடையாளத்தை பதித்து ரோவர் ஆய்வு செய்தது. ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. அதோடு நிலவின் தென்துருவம் தொடர்பான படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பியது.

திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தங்களின் பணியை செய்து முடித்தன. இதையடுத்து, நிலவில் 14 நாட்கள் இருள் தொடங்கியது. இதையடுத்து லேண்டர், ரோவர் செயல்பாட்டை நிறுத்தி வைத்து மீண்டும் நிலவில் பகல் தொடங்கும்போது செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ முடிவு செய்தது. லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் தான் என்றாலும், இந்த முயற்சி கைக்கூடினால் அது போனஸாக அமையும் என இஸ்ரோ தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 2ஆம் தேதி ரோவரும், கடந்த 4ஆம் தேதி விக்ரம் லேண்டரும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இரு கருவிகளிடம் இருந்த டேட்டாக்களை முழுமையாக இஸ்ரோ கைப்பற்றிய நிலையில், இரு ஆய்வு கருவிகளும் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நிலவில் சூரிய ஒளி பட்டு மீண்டும் பகல் பொழுது தொடங்கியுள்ளது.

இதையடுத்து, கடந்த 22ஆம் தேதியில் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. தற்போது வரை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னல் பெறுவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளதுச்ச்.

இத்தகைய சூழலில் தான் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது துரதிர்ஷ்டவசமாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னலை பெற முடியாவிட்டால் இஸ்ரோ என்ன செய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றிடம் இருந்து சிக்னல் பெற முடியாவிட்டால் அது நிலவுக்கான இந்திய தூதராக மாற்றப்படும் என கூறப்படுகிறது. அதாவது நிலவில் இந்தியா கால்பதித்து விட்டதன் அடையாளமாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

காவல்துறை உயரதிகாரிகள் போட்ட அதிரடி உத்தரவு..!! மனமுடைந்த எஸ்.ஐ. தற்கொலை..!! தென்காசியில் அதிர்ச்சி..!!

Sun Sep 24 , 2023
பணிக்கு வரும்போது மதுபானம் அருந்தக்கூடாது என்ற அதிகாரிகளின் உத்தரவால், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் பசுபதி (55). இவருக்கு, மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் அடிக்கடி புகார் எழுந்தது. இதுபற்றி உயரதிகாரிகளுக்கும் தகவல் சென்றுள்ளது. […]

You May Like