வடக்கு மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடுதம் பணியில் ஈடுபட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனுக்கு வடக்கே 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சின் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக லாபம் தரும் ஜேட் சுரங்கங்களின் மையப்பகுதியாகும். நேற்று மாலை 3.30 மணியளவில் மன்னா கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டபோது 30க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் ஏரியில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மேடுகளுக்கு அருகில் குடியேறும் சுயாதீன சுரங்கத் தொழிலாளர்கள் ஆவர்கள். ஜூலை 2020 இல், அதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 162 பேர் இறந்தனர், அதே நேரத்தில் நவம்பர் 2015 விபத்தில் 113 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.