fbpx

கேரளாவில் நிலச்சரிவு.. தொடர் மழை எதிரொலி; வீடு மண்ணில் புதைந்து ஒருவர் பலி.. நாலு பேரை தேடும் பணி தீவிரம்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் மலையோரம் உள்ள கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு முழுவதுமாக மண்ணில் புதைந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புபடையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், எஞ்சிய நான்கு பேரை தேடும் பணியில் மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Rupa

Next Post

’மகளின் கற்பை காக்க காதலனின் ஆணுறுப்பை வெட்டிய தாய்’..! திடுக்கிடும் பின்னணி..!

Mon Aug 29 , 2022
தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கள்ளக்காதலனின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள மஹெவகஞ்ச் பகுதியில் தனது 14 வயது மகளுடன் வசித்து வருபவர் 36 வயது பெண். இவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரை விட்டு பிரிந்து 32 வயதுடைய நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கையில், கடந்த […]
2-வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like