fbpx

இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் : பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 19 பேர் பலியாகி இருந்தனர். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை மாற்றத்தால் கனமழை, திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்கள் நாசமாகியுள்ளன. மேலும் தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால், பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.

காணாமல் போன 8 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more : “ஒழுங்கா ட்ரெஸ் இல்லாம வீடியோ கால் பண்ணு” சிறுமியை மிரட்டிய நபர்; பெண்களுக்கு போலீஸ் விடுத்த எச்சரிக்கை!!!

English Summary

Landslides, floods in Indonesia’s Java island: death toll rises to 21

Next Post

“பெத்தவங்க திட்டுனா என்ன, உனக்கு நான் இருக்கேன் தங்கோ” வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமிக்கு, 32 வயது நபர் செய்த காரியம்..

Fri Jan 24 , 2025
13 years old girl was sexually abused by 32 years old man in chennai

You May Like