fbpx

“திமுக ஊழல் பெருச்சாளிகள்” “இவங்களுக்கு மொழி தான் அரசியல் மூலதனம்” பாஜக தலைவர் ‘Annamalai’ கடும் கண்டனம்.!

Annamalai பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறார். தற்போது அவர் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ச்சியாக தமிழக அரசை குறை கூறி வருவதோடு தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் செய்வதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். தற்போது மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மான மூர்த்தியை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பேசியிருக்கும் அண்ணாமலை(Annamalai) திராவிட முன்னேற்றக் கழக அரசு மொழியை மட்டுமே மூலதனமாக வைத்து செயல்படும் அரசு என தெரிவித்திருக்கிறார். அந்தக் கட்சியில் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருக்கும் மூர்த்தி ஜீ ஸ்கொயர் என்ற ஒரு நிறுவனத்திற்காக மொத்த பத்திரப்பதிவு துறையையும் வேலை வாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் பத்திரப்பதிவு துறையில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும் அவர் கடுமையாக சாதி உள்ளார். பத்திரப்பதிவுத்துறையில் இடமாற்றத்திற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் வேலை நீக்கப்பட்டதை ரத்து செய்வதற்கும் காசு வாங்குகிறார்கள் இப்படி ஊழல் செய்து சேர்த்த பணத்தில் அமைச்சர் மூர்த்தி மதுரையில் மிகப்பெரிய மால் கட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

திமுகவின் ஊழல் பெருச்சாளிகள் தமிழகத்தை சுரண்டி அதன் முன்னேற்றத்தை கெடுத்து வருவதாகவும் கடுமையான குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார் அண்ணாமலை. இவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தமிழகம் முன்னேறாது. நம் குடும்பமும் நம் குழந்தைகளும் நன்றாக வாழ முடியாது. இவர்கள் காலம் காலமாக வாரிசு அடிப்படையில் ஊழல் செய்கிறார்கள். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அரசியல் மாற்றத்தை மக்கள் நிகழ்த்தி காண வேண்டும் என பதிவு செய்து இருக்கிறார்.

English Summary: BJP state leader Annamalai blasts DMK Minister Moorthy and his party for corruption and he said Dravidian party use language for their political benefit.

Next Post

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த 4 வகையான ஜுஸ் போதும்.!?

Sat Feb 24 , 2024
பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு மாற்றாக பதப்படுத்தபட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் சுவைக்காக மட்டுமே உண்டு வாழ்கின்றனர். இது உடலில் பல நச்சுக்களை தேங்க வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. மேலும் இதனால் உடலில் பல நோய்களும் ஏற்படுகின்றது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பல வகையான நோய்கள் பாதிக்காமல் இருப்பதற்கு இந்த 4 வகையான பழச்சாறுகளை அடிக்கடி […]

You May Like