fbpx

பத்ம விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி இறுதி நாள்…! உடனே அப்ளை பண்ணிடுங்க…!

பத்ம விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க 2022 செப்டம்பர் 15 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில், அறிவிப்பதற்கான பத்ம விருதுகள், 2023க்கு இணையம் வழியாக விண்ணப்பித்தல் மற்றும் பரிந்துரை செய்வது 2022 மே 1 அன்று தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 15 ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் தேசிய விருது இணையப்பக்கம் (https://awards.gov.in) மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.இந்த விருது பெற விண்ணப்பிக்கின்றவர் அல்லது பரிந்துரைப்பவர் பொருத்தமான விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையப்பக்கத்தில் உள்ள படிவத்தில் (800 வார்த்தைகளுக்கு மிகாமல்) குறிப்பிட வேண்டும்.

சிறப்புமிக்க சாதனைகள், சம்பந்தப்பட்ட துறையில் சேவை, ஆகியவை பற்றி குறிப்பிட வேண்டும்.உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பிலான இணையதளத்திலும் (https://mha.gov.in) பத்ம விருதுகளுக்கான இணையப்பக்கத்திலும், (https://padmaawards.gov.in) பத்மவிருதுகளுக்கான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த விருதுகளுக்கான விதிமுறைகள் (https://padmaawards.gov.in/AboutAwards.aspx) என்ற இணையப்பக்கத்தில் கிடைக்கும்.

Vignesh

Next Post

பயணிகளே கவனம்... இன்று 142 ரயில்கள் முழுமையாக ரத்து...! இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு...!

Sat Sep 3 , 2022
செயல்பாடு மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக இன்று 142 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து IRCTC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இதேபோன்ற பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக சுமார் 75 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷாம்லி, டாமோ, கான்பூர், பொகாரோ ஸ்டீல் சிட்டி, பதான்கோட், ஜால்முகி, புனே, அசன்சோல், அசிம்கஞ்ச், கயா, உதம்பூர் உள்ளிட்ட 142 இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் […]

You May Like