பாரதரத்னா விதுபெற்ற புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஸ்கர் 93வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவாக 40 அடி நீளத்தில் வீணை சிலையை உத்தரபிரதேச முதல்வர் திறந்து வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சரயு நதிக் கரையில் இந்த வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 40 நீளமும் 12 மீட்டர் உயரமும் கொண்ட வீணை 14 டன் எடை உடையது. இவரது 92 ஆண்டு கால வாழ்வை சித்தரிக்கும் வகையில் 92 தாமரை மலர்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏழு தூண்கள் இதைச் சுற்றி அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பை குறிக்கின்றது. இந்த சிலையின் பெயர் ’’லதா மங்கேஸ்வர் சவுக்’’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிலையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி , மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் , ஜெய்வீர் சிங் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
லதா மங்கேஸ்கர் வாழ்நாள் முழுவதும் கலை மற்றும் இசைக்காக அர்ப்பணித்துள்ளார். ராமரின் பஜனைபாடல்களை அவர் பாடி உள்ளார். எனவே அயோத்தி ராமர் கோயில் சாலைக்கு செல்லும் ’’லதா மங்கேஸ்கர் சவுக் ’’ திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கின்றேன் ’’ என கூறி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்துடன் மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என கூறிய அவர் , இந்த தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்றார். தூய்மையான சுகாதாரமான , பிளாஸ்டிக் இல்லாத அழகான அயோத்தியை உருவாக்க மக்கள் பங்களிப்பு அவசியம் என்றார்.