முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக எல்.இ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றாலே அதன் தயாரிப்புகள் கொரியன் நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருக்கும். ஆனால் தற்போது தற்போது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை நொய்டாவை சேர்ந்த சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த எல்.இ.டி டிவிக்கள் 43 இன்ச் முதல் 65 இன்ச் என பல்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிக்கள் டாவின்சி மற்றும் பிகாசோ ஆகிய பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டாவின்சி டிவிக்கள் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவிலும் பிகாசோ டிவிக்கள் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி.க்கள் சென்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 50 இன்ச் டி.வி. விலை ரூ. 24,999 ஆகவும், 55 இன்ச் டி.வி. ரூ.29,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 இன்ச் டிவியின் விலை சுமார் ரூ.9,999 ஆக விற்பனை செய்யும் இந்த நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட் கடிகாரம், வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்டவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.