fbpx

உண்மையை பேசியது குற்றமா? சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி கடிதம்!!

மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை, மீண்டும் சேர்த்திட வேண்டும் என சபாநாயகருக்கு எதிரக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார்.

அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது. இந்துக்கள் குறித்த பேச்சு, பாஜகவினர், பிரதமர் மோடி, சபாநாயகர் குறித்த பேச்சுகள் நீக்கப்பட்டது.

இந்நிலையில்,  மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை, மீண்டும் சேர்த்திட வேண்டும் என சபாநாயகருக்கு எதிரக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், “ஜூலை 1, 2024 அன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எனது உரையில் இருந்து எனது கருத்துக்கள் மற்றும் சில பகுதிகள் நீக்கபட்டது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். 

சபையின் நடவடிக்கைகளில் இருந்து சில கருத்துகளை நீக்குவதற்கான அதிகாரங்களை தலைவர் பெறுகிறார், ஆனால் குறிப்பிட்ட சில வார்த்தைகள் மட்டுமே, அவைகளின் தன்மை மற்றும் மக்களவையில் நடைமுறை விதிகளின் விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நள்ளிரவு 1 மணிக்கு, எனது உரையின் கணிசமான பகுதியானது, நடவடிக்கைகளில் இருந்து வெறுமனே நீக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஜூலை 2 தேதியிட்ட மக்களவையின் திருத்தப்படாத விவாதங்களின் தொடர்புடைய பகுதிகளை இணைக்கிறேன். நீக்கப்பட்ட பகுதிகள் விதி 380ன் கீழ் வராது என்று கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நான் சபையில் தெரிவிக்க விரும்புவது அடிப்படை உண்மை, உண்மை நிலை. பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கூட்டுக் குரலை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சபை உறுப்பினருக்கும் இந்திய அரசியலமைப்பின் 105 (1) வது பிரிவில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் உள்ளது. சபையில் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரின் உரிமை.

அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் வகையில், நேற்று நான் செயல்பட்டேன். நான் கருதிய கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தச் சூழலில், ஸ்ரீ அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். உங்கள் நல்ல சுயத்திற்கு உரிய மரியாதையுடன் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவாக்கம் தர்க்கத்தை மீறுகிறது. நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை மீட்டெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

Read more | விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா..!! வெளியான அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்..!! ரசிகர்கள் ஹேப்பி..!!

English Summary

Leader of the Opposition Rahul Gandhi has written to the Speaker asking him to include the parts of his speech that were removed from the Lok Sabha notes.

Next Post

உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!

Tue Jul 2 , 2024
It has been announced that those who have rejected their applications for women's rights can appeal. How to join this scheme can be seen in this post.

You May Like