நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ஒற்றை இஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக உள்ளது. அதைப்போல சிறிய ரக விமானங்களை பொறுத்தவரை ஒரு மணி நேர பயன்பாட்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் முதல் 5.25 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.