fbpx

அதிக வாக்குகள் பெற்று தரும் தலைவர்களுக்கு கார் பரிசு…! பாஜக வேட்பாளர் அதிரடி…!

அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் பாஜக கிருஷ்ணகிரி எம்பி வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 12 வேட்பாளர்கள், 15 சுயேச்சைகள் உட்பட 27 களத்தில் போட்டியிடுகின்றனர். இதனிடையே கட்சியினர் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை கட்சியின் தலைவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் எம்பி நரசிம்மன் போட்டியிடுகிறார். இவர் பாஜகவில் மாநில செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில், பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வரும் நிலையில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்; அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இதே போல் எந்த வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் கிடைக்கிறேதோ, அந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்..!! மேற்குவங்கத்தை சூறையாடிய புயல், ஆலங்கட்டி மழை..!! 5 பேர் உயிரிழப்பு..!!

Mon Apr 1 , 2024
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று வீசிய புயல், மழையில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் புயல் காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் சூறாவளி காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல், மழையால் ஏற்பட்ட […]

You May Like