fbpx

’என்னை விட்டு போய்டு’..!! காதலிக்கும்போதே வெறொரு பெண்ணுடன் தொடர்பு..!! கல்லூரி மாணவி தற்கொலை..!!

காதலித்த பெண்ணை காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டில் உள்ள சி.கே.நாயர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இதற்கிடையே, நந்தாவும் அதே பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஷுகைப் என்ற இளைஞரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதால், இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்த சமயங்களில் அப்துல் ஷுகைப் அவற்றை வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளான்.

’என்னை விட்டு போய்டு’..!! காதலிக்கும்போதே வெறொரு பெண்ணுடன் தொடர்பு..!! கல்லூரி மாணவி தற்கொலை..!!

நந்தாவை தொடர்ந்து மற்றொரு பெண்ணையும் அப்துல் ஷூகைப் காதல் வலையில் வீழ்த்திய பிறகு நந்தாவிடமிருந்து விலக முயற்சி செய்துள்ளான். நந்தாவோ, காதலை முறித்துக்கொள்ள விரும்பாததால் அப்துல் ஷுகைப்புக்கு அடிக்கடி போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சி இருக்கிறார். இதனை சற்றும் மதிக்காமல் பிளாக் லிஸ்டில் போட்டுள்ளான். பிறகு உறவினர்கள், நண்பர்கள் எண் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் நந்தா. இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வீடியோ காலில் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா. அதற்கு, தன்னை விட்டு விலகாவிட்டால், இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளான் அப்துல் ஷுகைப்.

’என்னை விட்டு போய்டு’..!! காதலிக்கும்போதே வெறொரு பெண்ணுடன் தொடர்பு..!! கல்லூரி மாணவி தற்கொலை..!!

இதனால், அதிர்ச்சியடைந்த நந்தா, வீட்டின் மாடியிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து நந்தாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சாட்சியாக நந்தா கடைசியாக அப்துல் ஷுகைப்புடன் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அப்துல் ஷுகைப்பை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!!

Tue Nov 8 , 2022
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ஒரு கிராம் […]

You May Like