திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவியை பலமுறை சித்ரவதை செய்து கர்ப்பமாக்கிய பல் டாக்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பல் டாக்டர் சுபி எஸ் நாயர் (32). இவருக்கு சமூகவலைத்தளம் மூலம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சுபி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் கல்லூரி மாணவி கர்ப்பமான நிலையில், சுபி அவரை மிரட்டி அந்த கருவையும் கலைக்க செய்துள்ளார். இதையடுத்து கல்லூரி மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுபியிடம் கூறியுள்ளார். ஆனால், சுபி திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கல்லூரி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சுபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.