சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வீரர் ரோஜர் ஃபெடரர் ஓய்வு அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சர்வதேச அளவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பெற்ற ரோஜர்.. பல மாதங்களாக டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை. கடைசியாக நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும் காயம் காரணமாக அவரால் பங்கேற்கமுடியவில்லை.
இந்நிலையில் அவர் எப்போது மீண்டும் விளையாட வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென அவர் ஓய்வை அறிவித்துள்ளார். உடல் ஒத்துழைப்பின்மையால் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த வாரம் நடைபெற உள்ள லேவர் கோப்பை போட்டிதான் தனது கடைசி போட்டி எனவும் தெரிவித்துள்ளார்.
20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்று , அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் பெற்றவர்களில் 3 ல் ஒருவராக இடம் பிடித்துள்ளார். 8 முறை விம்பிள்டன் பட்டமும் பெற்று தர வரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
’’ மேலும் இந்த 24 ஆண்டு கால பயணம் 24 மணி நேரத்தில் முடிவடைவது போல் இருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.