fbpx

மாஸ் இயக்குனருடன் கூட்டணி வைத்த லெஜெண்ட் சரவணன்..!! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அறிவிப்பு..!!

லெஜெண்ட் சரவணன் பிரபல இயக்குனர் ஒருவருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். இதையடுத்து, புதிய பட அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

அதாவது தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சூரி, சசிகுமார், ரோஷினி, பிரிகிடா, உன்னி முகுந்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கருடன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் ஆனது.

கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த பட ஷூட்டிங்கை சைலண்டாக தொடங்கி இருக்கிறார் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கனவே லெஜண்ட் என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன், தற்போது துரை செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்துள்ளதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Read More : ஆதார் கார்டு வாங்கப்போறீங்களா..? இதுதான் பெஸ்ட்..!! UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

The news that legend Saravanan is going to team up with a famous director has been received by the fans.

Chella

Next Post

இனி ”கேரளா” அல்ல..!! பெயர் மாற்றம் செய்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்..!!

Mon Jun 24 , 2024
The resolution to change the name of the state of Kerala to 'Kerala' has been passed unanimously in the state assembly.

You May Like