பழம்பெரும் நடிகை சிறுநீரை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமியாக இருந்த போது கண்டனா படத்தின் மூலம் திரைக்கு வந்தவர். தனது 14வது வயதில் நாடோடி தான் தனது முதல் தமிழ் படம். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்தார்.
மேலும் அவர் தனது இரண்டு தங்கைகளுக்கும் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இப்போது யாரும் தனக்கு உதவ முன் வருவதில்லை என வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு மகள்களும் ரோஷன் என்ற மகனும் இருந்தனர்.
கணவர் சொந்தமாகப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது, அவர்களும் ஒரு படத்தைத் தயாரித்தனர். ஆனால் படம் முடிந்ததும் பைனான்சியருக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் வெளியாகவில்லை. இந்த கவலையில் என் கணவர் இறந்துவிட்டார். இப்பொழுது நடிகை ஜெயக்குமாரியும் யாருடைய ஆதரவும் கிடைக்காமல் மருத்துவமனையில் உயிர்க்காக போராடி வருகிறார்.