தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை அக்டோபர் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாளை கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த கூட்டத்தொடரில் 2023-24ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.