fbpx

இளமை பருவ நோய்களைத் தடுக்க உதவும் விளாம்பழம்!… மருத்துவ பயன்கள் இதோ!

ஒவ்வொரு வகை காய்கறிகளும், பழங்களும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நன்மை பயக்கும் சுகாதார பண்புகளைக் கொண்டுள்ளன. அதனடிப்படையில் விளாம்பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம்

இந்த நவீன காலத்திற்கேற்ப நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் விளாம்பழம் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் எந்தவித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வள ர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரணசக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள இந்த விளாம்பழம், இதயத்திற்கு நல்லபலத்தைதரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருத யத்துடிப்பை இயற்கையின் அளவை மாறு படாமல் பாதுகாக்கும். மேலும், பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறு கிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

வெயிலில் அதிகம் அலைவதால் முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும். இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தி ல் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விட்டால் முகம் இளமையாக மாறும் .விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதி யை தனியே எடுத்துக் காயவைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடு த்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகளும் காணாமல் போகும்.

தயிருடன் விளாம்காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்தவிருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. மேலும், கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத் தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்றும் இதனால் சருமம் மங்காமல் செழு மை யடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் மரப்பட்டையைப் பொடித்து தண்­ணீரில்போட்டு கொதிக்க வைக்கவும். இந்தகஷாயத்தை வடிகட்டிகுடிக்க, வறட்டு இருமல், மூச்சுஇழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

Kokila

Next Post

காலை உணவை இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!... கேன்சரை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Tue Feb 21 , 2023
காலை நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். அன்றாட வாழ்க்கையில் பலரும் காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறார்கள். இதனால் காலை உணவையே சாப்பிடுவதில்லை. நேரடியாக மதிய உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். இதனால், நமது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் […]

You May Like