fbpx

உயிரை காவு வாங்கிய எலுமிச்சை மரணம்..!! தூக்கி வீசப்பட்ட 26 வயது இளம்பெண்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது லோகேஸ்வரி. இவர், கணவர் சந்தோஷுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தன்னுடைய வீட்டிலுள்ள எலுமிச்சை மரத்தில் எலுமிச்சை பழம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது, வீட்டின் மாடியில் ஏறி இரும்பு கம்பியை கொண்டு, எலுமிச்சை பழத்தை பறிக்க முயன்றார். அப்போது, வீட்டின் மாடிக்கு அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது லோகேஸ்வரி கையில் வைத்திருந்த இரும்பு கம்பி பட்டுள்ளது.

இதில், அவர் மின்சாரம் தூக்கியடிக்கப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், இந்த தாழ்வாக சென்ற மின் கம்பியை அகற்றக்கோரி பலமுறை மின்வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

ஆனாலும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் லோகேஸ்வரியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதானம் செய்தனர். இதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Read More : TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

He was electrocuted and seriously injured. Neighbors immediately rescued him and took him to the hospital.

Chella

Next Post

முகம் வீங்கியிருக்கா.. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம்..!! அலட்சியம் வேண்டாம்..

Wed Jan 8 , 2025
Does this part of the body look swollen? It sounds like you have a fatty liver problem.

You May Like