நம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களை கடைபிடித்து வருகிறோம். அவை அனைத்தும் நம் முன்னோரிடம் இருந்து கற்றுக்கொண்டவை என்றாலும், அதற்கு பின்னால் ஒரு வகையான அறிவியல் காரணம் இருக்கிறது. இதுபற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாகவே நாம் ஏதாவது புதிய வாகனம் வாங்கும்போது எலுமிச்சம் பழத்தை சக்கரத்தின் அடியில் வைத்து வாகனத்தை எடுப்பதை வழக்கமாக வைத்திருப்போம். இது நம்முடைய காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆனால், இதன் உண்மை காரணம் என்னவென்றால், முந்தைய காலங்களில் பெரும்பாலும் போக்குவரத்து என்றாலே அது மாட்டு வண்டி தான் இருக்கும்.
அப்படி மாடுகள் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அதன் கால்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தொற்று கிருமிகள் ஏற்பட்டு மாடுகளின் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாடுகளின் நான்கு கால்களுக்கு அடியிலும் எலுமிச்சம் பழத்தை வைத்து மிதிக்க வைத்தார்கள். அவ்வாறு மிதிக்கும் போது எலுமிச்சம் பழத்தின் சாறு மாடுகளின் காலில் படும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்து காயங்கள் ஏதேனும் இருந்தால் விரைவில் குணமாகிவிடும்.
இந்த பழக்கம் நாளடைவில் சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைக்கும் பழக்கமாக மாறியது. அதை பின்பற்றி தான் நாமும் தற்போது வரை புதிதாக வாகனங்கள் வாங்கும்போது, சக்கரத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்கிறோம். அவ்வாறு எலுமிச்சம் பழத்தை சக்கரங்களுக்கு அடியில் வைத்து நசுக்கும் போது கண் திருஷ்டி கழிவதாக பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
Read More : ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! விமானம், ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை..!!