லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு செப்.30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானது விஜய் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு எனக்கு வேற மாதிரி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. லியோ ஆடியோ லான்ச் ரத்து என்று தான் படக்குழு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், ஆடியோ லான்ச் நடத்தப்படவில்லை என்று ஏன் வெளியிட்டது என்று தெரியவில்லை.
நேற்று இரவு 2 மணி வரை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டுக்காக மேடை அமைக்கும் பணி நடந்துக்கொண்டு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் தயாரிப்பாளர் லலித், உயிர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அந்த இடத்தில் சந்தித்து விஐபிக்கள் வரும் வழி, பார்வையாளர்கள் வரும் வழி, பார்க்கிங் உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததற்காக அவர்கள் சொல்லும் காரணம் தான் வேடிக்கையாக இருக்கிறது. நிறைய கூட்டம் வரும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது விஜய்க்கு கெட்டப்பெயராகி விடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நிகழ்ச்சி திடீரென ரத்தானதற்கு பின்னால் நிச்சயமாக அரசியல் அழுத்தம் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
ஆனால், உதயநிதி இந்த திட்டத்தில் விஜய்யுடன் மல்லுக்கு நிற்க மாட்டார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே போல ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இந்த படத்திற்கு எதிரான வேலையில் இறங்க மாட்டார்கள். ஆனால், இந்த படத்திற்கு அழுத்தம் இருப்பதால், அது திமுக அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமாக இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு. என்ன காரணம் என்றால், விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த ஆடியோ இசைவெளியீட்டு விழாவை அரசியல் மாநாட்டு விழாவாக பயன்படுத்தப்போகிறார் என்கிற தகவல்கள் வந்ததால் இவ்வாறு நடந்து இருக்கலாம்” என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.