லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில், சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு நீதிமன்றங்களை அரசையும் நாடி வருகிறது. சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு பதில் 7 மாணிக்காவது திரையிடப்படுமா என்றும் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் லியோ படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் கூறி அமைச்சர் உதயநிதி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அவர் தற்செயலாக போட்ட பதிவில் லியோ படத்தின் சீக்ரெட் உடைந்துள்ளது. ஏனென்றால் லியோ படம் LCUவா என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படுக்குழு ரகசியம் காத்து வந்தது. ஆனால் உதயநிதியின் பதிவில் LCU என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் படம் கைதி விக்ரமுடன் தொடர்புடைய படமாக இருப்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.
இது குறித்து உதயநிதியின் பதிவில், ” தளபதி விஜய் அண்ணாவின் லியோ படம் பிடித்திருக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார், இசையமைப்பாளர் அனிருத் இசை, சண்டை பயிற்சி மாஸ்டர் அன்பரிவ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான 7ஸ்கிரீன்ஸ்டுடியோ ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி இறுதியில் #LCU என்று குறிப்பிட்டு ஆல் தி பெஸ்ட் டீம் என்று பதிவிட்டுள்ளார்.