fbpx

எதிர்பார்ப்பை எகிறவைத்த லியோ!… முதல்நாள் வசூல் இத்தனை கோடியா?… ரஜினி பட சாதனையை முறியடித்து அசத்தல்!

ரூ.145 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் விஜய் நடிப்பில் உருவான லியோ படைத்துள்ளது.   

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம், பல சிக்கல்களை கடந்து நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த ஆரம்ப தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், முதல் நாளில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.  பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துள்ளது.    

தமிழகத்தில் லியோ படம் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.12.50 கோடியும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் ரூ.17 கோடி வசூல் செய்யும் என்றும், கர்நாடகாவில் ரூ.14.5 கோடி வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 86.35% சதவீதம் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகியுள்ள நிலையில் சென்னையில் கிட்டத்தட்ட 1176 காட்சிகளைக் கொண்டுள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் மொத்த வசூல் சுமார் ரூ.80 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகளவில் ரூ.145 கோடி வசூல் ஆகியுள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ‘2.O’ திரைப்படம் ரூ.113 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை விஜய்யின் லியோ படம் முறியடித்து அசத்தியுள்ளது.

தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ: தளபதியின் லியோ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்: ரூ.285 கோடி, முதல் நாள் உலகளாவிய வசூல்: ரூ.135 கோடி முதல் ரூ.145 கோடி ஆகும். ராகவா லாரன்ஸ், கன்கனா நடிப்பில் உருவான சந்திரமுகி 2 படத்தின் மொத்த பட்ஜெட்: ரூ.65 கோடி, வசூல்: ரூ.52.1 கோடி ஆகும். இறைவன் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்: ரூ.28 கோடி, வசூல்: ரூ.20.5 கோடி. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்: ரூ.28 கோடி, வசூல்: ரூ.100.1 கோடி ஆகும்.

முதல் நாள் வசூல் அடிப்படையில், சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டியலில் ப்ளாப் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இரு படங்களும், தயாரிப்பு செலவை விட குறைவான வசூலையே, தியேட்டர் ஈட்டியுள்ளன. ஓடிடி மற்றும் தொலைக்காட்சி விற்பனை பெரிய அளவில் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்பது, தியேட்டரின் வசூலை வைத்தது என்பதால், சந்திரமுகி மற்றும் இறைவன் திரைப்படங்கள் தோல்வி படங்களாக அறியப்படுகின்றன.

Kokila

Next Post

'இப்படியே போச்சுனா அரிசி கிடைக்காது'..!! ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி..!!

Fri Oct 20 , 2023
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் பொருட்கள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டபடியே உள்ளது. இது தவிர, உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இரு […]

You May Like