fbpx

லியோ படம் பார்த்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்: இன்ஸ்டா பதிவால் குஷியான ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தளபதி விஜய் நடிப்பில் வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்துள்ளதை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த பாடம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் விசில் போடு ப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழ்ந்துள்ளார். தனது லேப்டாப்பில் லியோ படத்தை பார்த்ததை இன்ஸ்டா ஸ்டோரிவாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்களுக்கும் பிடித்த ஹீரோவாக தளபதி விஜய் இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ் ; இறுதிச்சடங்கிற்கு தயாராகும் அரண்மனை!

shyamala

Next Post

பிளாக் ஆன 17000 கிரெடிட் கார்டுகள்!… என்ன காரணம்?… பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய கார்டு!

Sat Apr 27 , 2024
ICICI : மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 17 ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ICICI வங்கி Block செய்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி , நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு வர்த்தகத்தில், மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளில் 16.6% ஐசிஐசிஐ வங்கியால் நிர்வகிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், டெக்னோஃபினோ (TechnoFino) நிறுவனர் சுமந்த […]

You May Like