தொடர் கனமழை காரணமாக, வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. வால்பாறையில் உள்ள பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததால், மலைச்சரிவில் உள்ள வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..