fbpx

லெஸ்பியன் உறவு..!! 3 குழந்தைகளின் தாயுடன் 2-வது முறையாக ஓட்டம் பிடித்த இளம்பெண்..!! கணவர்கள் அதிர்ச்சி..!!

3 குழந்தைகளின் தாயுடன் லெஸ்பியன் உறவு கொண்டிருந்த 25 வயது இளம்பெண், கணவன் கட்டிய தாலியை கழற்றி வைத்துவிட்டு 2-வது முறையாக ஓட்டம் பிடித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த அரசமரத்துகாட்டூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு, கடந்த 5 ஆண்டுக்கு முன் வெள்ளித்தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பக்கத்து வீட்டில் வசித்த 3 குழந்தைகளின் தாயுடன் அந்த இளம்பெண் நெருங்கிப் பழகி வந்துள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் லெஸ்பியன் உறவு (ஓரினச்சேர்க்கை) ஏற்பட்டுள்ளது. இதை அரசல்புரசலாக அறிந்த 3 குழந்தைகளின் தந்தை, இனியும் இங்கிருந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் எனக்கருதி வீட்டை காலி செய்துவிட்டு தம்மநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி, இளம்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரது கணவர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெட்ரூமில் அவர் கட்டிய தாலி மற்றும் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், ”எனக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை. அதனால்தான், தாலியை கழற்றி வைத்திருக்கிறேன். நான், எனக்கு பிடித்த பெண்ணுடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்” என எழுதியிருந்தது. கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அடுத்த சில மணி நேரத்தில் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் கணவரும் வந்து அங்கு புகார் கொடுத்தார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அருகருகே வசித்தபோது 3 குழந்தைகளின் தாயுடன் அந்த இளம்பெண் லெஸ்பியன் உறவு வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஒரு முறை ஓட்டம் பிடித்ததும், தற்போது 2-வது முறையாக ஓட்டம் பிடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த முறை இருவரும் ஓடியபோது, உறவினர்கள் மீட்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, 3 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் வாழும்படி 39 வயது கொண்ட அப்பெண்ணிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்பேரில்தான், அவர்கள் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். தற்போது, மீண்டும் ஓட்டம் பிடித்துள்ள லெஸ்பியன் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chella

Next Post

இந்தியாவின் மூலம் இதுவரை 424 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளது...! மத்திய அரசு தகவல்...!

Tue Jun 6 , 2023
இந்தியாவின் மூலம் இதுவரை 424 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு, அதில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் 389 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள்களை செலுத்தியதன் மூலம் கிடைத்த 174 மில்லியன் அமெரிக்க டாலர்களில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 157 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதேபோல், 256 மில்லியன் யூரோ வருவாயின் மோடி அரசின் ஒன்பது […]

You May Like