fbpx

கவலையை விடுங்க..!! இனி ஈசியா உங்கள் பற்களை அழகாக மாற்றலாம்..!! வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!!

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உணவு முறை பழக்க வழக்கத்தால் எளிதில் பற்கள் பாதிக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் பேக்கரி உணவு வகைகள் மூலம் பற்களின் நிறம் மாறிவிடுகிறது. பற்கள் மஞ்சள் நிறமாக மாறி விடுவதால் முகத்தோற்றம் முழுவதும் கெட்டுவிடுகிறது. மஞ்சள் நிறமாக மாறியுள்ள உங்கள் பற்களை இயற்கை வழிகள் மூலம் எளிமையாக வெள்ளை நிறமாக மாற்றலாம். பல் வலி, பல் சொத்தை, பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் எளிமையாக குணப்படுத்தலாம்.

பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் உங்களுடைய வயது, உங்களுடைய பரம்பரை வியாதி, சரியான முறையில் பல் துலக்காமல் இருப்பது. அதிக அளவில் டீ, காபி, சிகரெட், மது அருந்துவது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகள் தான். அதுமட்டுமில்லாமல் பற்கள் சொத்தை, பல் சம்பந்தமான, ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

கொய்யா இலை: தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்லவேண்டும். நன்றாக மென்று பின் அவற்றின் சாரை துப்பிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும், பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும்.

சோற்றுக்கற்றாழை : சோற்றுக் கற்றாழையை பற்களில் நன்றாக தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாக மாறி விடும். அது மட்டுமில்லாமல் வாயில் இருக்கும் கிருமிகள் பாக்டீரியா பூஞ்சைகள் முழுவதும் அழிந்துவிடும்.

கேரட் : தினமும் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பற்கள் வெண்மையாக மாறி விடும், சொத்தை பல் இருந்தால் குணமாகிவிடும், மேலும் முகம் வெள்ளையாக மாறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி பற்கள் வெண்மையாக மாறிவிடும்.

உப்பு : உப்பை சுடுநீரில் போட்டு நன்றாக கலக்கி பிறகு வாய் முழுவதும் நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

Read More : ”இந்த வகை இனிப்புகளை சாப்பிட்டால் கிட்னி செயலிழந்து விடும்”..!! ”இப்படியெல்லாம் ஏமாத்துவாங்க”..!! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

English Summary

Mix the salt in hot water and then swish it all over your mouth

Chella

Next Post

"ப்ரோக்கோலி" புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் தன்மை கொண்டது!. ஆய்வில் வெளியான உண்மை!

Wed Oct 30 , 2024
Broccoli has the ability to reduce the occurrence of cancer! The truth revealed in the study!

You May Like