நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
அமரன் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக முதல் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக அமரன் படம் பார்த்து படக்குழுவை பாராட்டினார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் பார்த்த கையோடு சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அமரன் படம் பார்த்து பாராட்டி இருந்தார்.
இப்படி பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களே 3 நாட்களில் 100 கோடி வசூலை இதுவரை எட்டிப்பிடிக்காத நிலையில், சிவகார்த்திகேயன் அதை சாதித்து காட்டியுள்ளார்.
மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த அமரன் திரைப்படம் நான்காம் நாளான நேற்றும் அதன் வசூல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். விரைவில், ரூ.200 கோடியைத் தாண்டும் என விநியோகிஸ்தர்கள் கணித்துள்ளனர்.
Read more ; அமரன் படத்தை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை…நன்றி தெரிவித்த கமல்ஹாசன்..!!