fbpx

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 1 சவரன் விலை இதுதான்..!! தங்கம் வாங்க அருமையான சான்ஸ்!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையே, சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 19) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.520 குறைந்து  ரூ.56,560-க்கும், ஒரு கிராம் தங்கம்  ரூ.65  குறைந்து  ரூ.7,070 க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.99க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; இந்த சிம்பிள் விஷயங்களை செய்தாலே போதும்… உங்களுக்கு பக்கவாதம், இதய நோய்கள் எல்லாம் வரவே வராது…!

English Summary

Let’s check today’s gold and silver prices in Chennai.

Next Post

அம்பேத்கர் குறித்து எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு கடிதம் எழுதிய நேரு!. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Thu Dec 19 , 2024
Nehru: அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய கடிதத்தில் அம்பேத்கர் குறித்து எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்வினா மவுண்ட்பேட்டன் உட்பட பலருக்கு நேரு எழுதிய கடிதத்தை திருப்பி கொடுங்கள் என்று சோனியா, ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்றழைக்கப்படும் பி.எம்.எம்.எல் உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி சார்பில், காங்கிரஸ் […]

You May Like