fbpx

’மோடியை சங்கிலியால் கட்டி இழுத்து வருவோம்’..!! பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரி..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் அந்நாட்டு பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால், காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடக்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,
“இந்தியாவை ஆக்கிரமித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சங்கிலியால் பிணைத்து இஸ்லாமிய தேசத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார். மேலும், இந்தியா மீது படையெடுத்த பிறகு பாலஸ்தீனத்தை விடுவிப்பதாக கூறுகிறார். இவரின் பேச்சை கேட்டு அங்கு நின்றிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

வைரலான அந்த வீடியோவில் “இந்தியாவின் ஆட்சியாளர்கள்” அடிமைகளாக ஆக்கப்படுவார்கள் என்றும், பாலஸ்தீனம் கிழக்கு ராணுவத்தால் விடுவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் “நாம் விரும்பும் அளவுக்கு யாரும் மோடியை சிறைபிடிக்க விரும்பவில்லை” என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறுகிறார்.

Chella

Next Post

இன்ஸ்டா, பேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இனி மெசேஜ் அனுப்ப முடியாது..!! மெட்டா நிறுவனம் அறிவிப்பு..!!

Wed Dec 6 , 2023
குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020ஆம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messenger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தோடு அந்த சேவையை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இனி, இந்த வசதி […]

You May Like