உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டம் சஹார் பகுதியைச் சேர்ந்த திலீப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகதி யாதவ் (22) என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சஹார் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் திலீப் யாதவ் படுகாயமடைந்து கிடந்தார். இதனைப் பார்த்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே, திலீப்பின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக அவருடைய மனைவி பிரகதியிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு முன்பே பிரகதி, அனுராக் என்கிற மனோஜை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திலீப்குமாருக்கு பிரகதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால், தனது கணவரை கொலை செய்துவிட்டு நாம் நிம்மதியாக வாழலாம் என பிரகதியும் கள்ளக்காதலன் மனோஜும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கூலிப்படையை சேர்ந்த ராம்ஜி சவுத்ரிக்கு ரூ.2 லட்சம் கொடுத்து திலீப்குமாரை ஆள் செட் செய்துள்ளார்.
அதன்படி, கடந்த 19ஆம் தேதி திலீப்குமாரை, உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு வயல்வெளியில் தூக்கிப் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை உறுதி செய்ய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி, மனைவி பிரகதி, கள்ளக்காதலன் மனோஜ் கூலிப்படையை சேர்ந்த ராம்ஜி சவுத்ரி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.