Hug Day 2025: மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வழிமுறையாக கட்டிப்பிடித்தலை கொண்டாடுகிறது. மகிழ்ச்சி, துக்கம் இந்த இரண்டிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
அந்தவகையில் கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதங்களிலும் அமையலாம். கட்டிப்பிடித்தல் மன இறுக்கத்தை குறைக்கும் என்பது, இங்கு பலருக்கும் தெரிந்திருக்காது. பொதுவாக காதலைத் தவிர, மற்ற இடங்களில் பாராட்டு, விடை பெறுதல் போன்றவற்றை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்போம். இந்த கட்டிபிடித்தல் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? நம்முடைய வாழ்வில் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்குமாம்.
பிப். 7ஆம் தேதியில் இருந்து காதலை போற்றும் வகையில் அந்த ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். காதலர் தின வாரத்தின் ஆறாவது நாள் கட்டிப்பிடிப்பு தினம் ஆகும். இது பிப்ரவரி 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இன்று புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிக்கும் நாள் என்பது உங்கள் துணையிடம் அன்பான அரவணைப்பின் மூலம் அன்பை வெளிப்படுத்துவதாகும்.
இன்றளவில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அரவணைக்கும் விஷயத்தில், குழந்தை வளரும் வரை அது சார்ந்த நன்மைகள் ஏற்பட்டாலும் பின் நாட்களில் அரவணைப்பு குறைவதன் காரணமாக, அதனால் ஏற்பட்ட நன்மைகள் அனைத்தும் மாயமாகிறது. ஆனால், அரவணைப்பது அல்லது கட்டியணைப்பது மற்றும் மென்மையான தொடுதல் போன்றவை மனிதர்களிடம் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்துகிறது என்று பல ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. மேலும், அரவணைப்பதன் மூலமாக ஒரு நபருக்கு மனச்சோர்வு மற்றும் பதற்றம், வலி ஆகியவை குறைகிறதாம். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் அரவணைப்பு என்பது பல்வேறு நன்மைகளை வழங்கியுள்ளது.
பொதுவாகவே கட்டியணைக்கும் போது நம் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகமாகின்றது. அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படும் போது மனதிற்கு பிடித்த நபரை அணைப்பதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு கிடைப்பதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றது. மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைக்கும்போது உடலில் சுரக்கும் கார்டிஸால் சுரப்பினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையயும் என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் கூட அணைப்பு முக்கியமான தேவையாகவுள்ளது. இது தனிமை உணர்வை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. குழந்தைகளின் மன வளர்ச்சி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர் குழந்தைகளுடன் தொடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது.
குழந்தைகளை பெற்றோர் கட்டியணைக்கும் பொது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது. உண்மையில் கட்டியணைத்தல் தியானம் செய்வதற்கு சமனான மன அமைதியை கொடுக்கும்.இது நம் மனதில் மகிழ்ச்சியை தூண்டும். கட்டிப்பிடித்தல் என்பது உண்மையில் ஒரு வைத்தியம் எனவே கூறவேண்டும். இதனால் தசைகளில் மீட்டுருவாக்கம் நடைபெறும். இதனால் உடல் எப்பொதும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது. அடிக்கடி மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைப்பதால் மனதில் ஏற்படும் தேவையற்ற பய உணர்வுகள் நீங்கும்.இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
Readmore: எல்லையில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கண்ணிவெடி தாக்குதல்!. 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்!