fbpx

“தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம்”..!! அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி..!!

தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் மாநிலத்தின் முதல்வராக முடியாது. திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது. இதை விவாதித்தால் நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம். இது வெறும் பேச்சு மட்டும் கிடையாது. எங்களுக்கு முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம்.

பட்டிலின் மக்களுக்கு அதிகமாக செய்தது பாமக தான். நாங்கள் 1998ஆம் ஆண்டு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால், திமுக 1999ஆம் ஆண்டில் தான், ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியது” என்று தெரிவித்தார்.

Read More : ’என்னை பார்த்தாலே திமுகவுக்கு பயம்’..!! ’இனிதான் ஆட்டமே இருக்கு’..!! பரபரப்பை கிளப்பிய குஷ்பு..!!

English Summary

Bamaka leader Anbumani Ramadoss said that we will make a person from the Dalit community as the Chief Minister.

Chella

Next Post

PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு தகவல் இதோ..!!

Thu Aug 15 , 2024
If your PAN card is lost, you can get it made again in this way

You May Like