கோடை காலத்தில் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏசியின் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். அத்தகைய ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம். பொதுவாக ஏசியை பொருத்திய பிறகு அவை நல்ல நிலையில் செயல்படுகிறதா என்பதை பல சமயத்தில் நாம் கவனிக்க தவற விடுகிறோம். முதலில் வீட்டில் இருக்கும் அறைக்கு ஏற்ப ஏசி பொருத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1, 1.5 மற்றும் 2 டன் என பல்வேற விகிதத்தில் கிடைக்கும் ஏசிக்களை உங்கள் அறைக்கு ஏற்ப சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு 150 சதுர அடி அறைக்கு 1.5 டன் ஏசி சரியானதாக இருக்கும். அதே பெரிய ஹால் என்றால் 3 டன் வரை ஏசி பொருத்தப்படலாம். ஏசிக்கான உதிரிப்பாகங்களை குறைந்த விலையில் வாங்கி பொருத்தக் கூடாது, காரணம், அது விரைவில் பழுதாக கூடியதாக இருக்கலாம். அதேபோல் ப்யூஸ் வயர், டிரிப்பர் போன்றவற்றை ஏசிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். டிரிப்பர் 20 ஆம்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவேளை ஏசிக்கு ஏற்றவாறு பொருந்தாவிட்டால் மின்சாரம் செல்லும் வயர்களில் கோளாறு ஏற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏசி கூட பாதிப்ப ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்க்க ஏசிக்கு ஏற்றவாறு ப்யூஸ் வயர், டிரிப்பர் தரமான நிறுவனஙகளில் இருந்து வாங்கி பொருத்த வேண்டும்.
ஏசியின் வெப்பநிலை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்க கூடாது. அதற்கு குறைவாக வெப்பநிலையை தேர்வு செய்தால் ஏசியின் செயல்பாடு அதிகரிக்கும். இதனால் ஏசியின் கம்பரசர், காயில், குளிரூட்டிக்கு செல்லும் வயர் என எல்லா பகுதியும் விரைவில் சூடாகி பழுதாகிவிடும். இதன் காரணமாக தீப்பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஏசியின் வெப்பநிலையை எக்காரணம் கொண்டும் 16 டிகிரி வரை கொண்டு செல்லக்கூடாது. இதையெல்லாம் சரியான முறையில் கடைபிடித்தால், தங்களது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசியை நீண்ட நாட்களுக்கு நாம் எந்த பழுதும் இன்றி உபயோகப்படுத்தலாம்.