fbpx

ஆரம்பிக்கலாங்களா..! பாஜக ஆட்சி எப்படியெல்லாம் இந்தியாவை உருக்குலைத்துள்ளது – முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

(2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது, தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா என்ற கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது. இந்நிலையில் இந்தியா” கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இன்று நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கூட்டணியில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஆரம்பிக்கலாங்களா என்று விக்ரம் பட கமல் ஸ்டைலில் தொடங்கி, இந்தியாவுக்காக பேச வேண்டிய கட்டாயம் என்றும், பாஜக இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்துள்ளது என்றும் இதை பற்றி பேச “Speaking For India” என்று தலைப்பு வைக்கலாமா என கேட்டிருக்கிறார் முதல்வர்.

அந்த விடீயோவில் “ஆரம்பிக்கலாங்களா… என்று தொடங்கி, 123 சொல்லி பேசிய முதல்வர், கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன், திராவிட முன்னேற்ற கழகம் 75ஆம் ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புக்கள் நாங்கள்.

இப்போ இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கோம். 2024ல் முடியப்போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்துள்ளது, எதிர்காலத்தில் நாம் கட்டமைக்கப் போகும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும்னு ஒரு ஆடியோ சீரிஸ்-ல் பேசப்போறன், அதுக்கு “Speaking For India” என்ற தலைப்பே வைத்துக்கொள்ளலாமா, தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்.” என்று முடிவடைகிறது அந்த வீடியோ.

Kathir

Next Post

சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதி 3 வயது குழந்தை பலி..! ஜவான் பட நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து…

Thu Aug 31 , 2023
காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் 3 வயது குழந்தை பலி. தனியார் கல்லூரி பேராசிரியரான ராமகிருஷ்ணன் என்பவர் தனதுமனைவி மற்றும் 3வயது குழந்தையுடன் ஷாருக்கானின் ஜவான் பட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது சோமங்கலம் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்துள்ளது, எதிர்பாரா விதமாக மாட்டின் மீது பைக் மோதி நிலைதடுமாறி பைக்கில் பயணித்த அனைவரும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக […]

You May Like