fbpx

”வெற்றி பெற்று வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்”..!! மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு..!!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்பி பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும், அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது 2 வழக்குகள் பதியப்பட்டன. அதில், ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஓரிரு தினம் முன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது. ஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். ஆனால், மல்யுத்த வீரர்கள் பேரணியாகச் சென்றது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, முன்பைவிட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம் என வீராங்கனைகள் அறிவித்துள்ளார்கள். மேலும், டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

Chella

Next Post

சிஎஸ்கே-வின் வெற்றிக்கு பாஜக உறுப்பினர் தான் காரணம்..!! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!!

Tue May 30 , 2023
சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 […]

You May Like