கோலிவுட்டில் இருக்கும் புகழ் பெற்ற இயக்குநர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார், வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அனைத்து படங்களும் ஹிட் அடித்திருக்கின்றன. இவர் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி, மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று விடுதலை. அதைத்தொடர்ந்து அவரது படைப்பாக சமீபத்தில் வெளியான படம், விடுதலை பாகம் 2.
கடந்த 10 வருடங்களாக கோலிவுட்டின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி, இந்த படத்தின் மூலம் சீரியஸான ஹீரோவாக அவதாரம் எடுத்தார். விடுதலை படத்தில் இவர் ஒரு காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகத்தில் வந்த முக்கியமான கதாப்பாத்திரங்களுள் ஒன்று, வாத்தியார். தற்போது இரண்டாம் பாகத்தில் இந்த கேரக்டரின் கதைதான் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், துணிச்சலான வசனங்கள், பேச்சே இல்லை என்றாலும் கதையை புரிய வைக்கும் காட்சிகள் இருப்பதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இப்படம் கடந்த டிசம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. . விடுதலை 2 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதைப் போல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7 கோடி வசூலித்து மாஸ் காட்டிய இப்படம், இரண்டாம் நாளில் அதைவிட கூடுதலாக வசூலித்து தன் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.
விடுதலை 2 திரைப்படம் 2-ம் நாளில் இந்திய அளவில் ரூ.8 கோடி வரை வசூலித்து உள்ளதாம். மேலும் உலகளவில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 2 நாட்களில் விடுதலை 2 திரைப்படம் 20 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் விடுதலை 2 படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாகத்தின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Read more ; கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் கரு சிதைவு ஏற்படுமா..? – மருத்துவர் விளக்கம்